செவ்வாய், 15 நவம்பர், 2016

கிடக்குறது கிடக்கட்டும் !! கிழவிய தூக்கி மணமேடையிலே உட்கார வை !!




கிடக்குறது கிடக்கட்டும் !!
கிழவிய தூக்கி மணமேடையிலே உட்கார வை !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

நேற்று முன்தினம் மாலை அதாவது 13-11-2016 
மாலை ஆளும் அண்ணா திமுகழகத்தின் பொதுச்செயலாளரும், மாநில வரலாற்றிலயே முதன் முறையாக, கைவசம் எந்தத்துறையும் இல்லாத,ஒரு முதல்வர் (அத்தனை பொறுப்புகளும் பொம்மைநிதித்துறை அமைச்சர் பொறுப்புவகிக்கும்திரு.OPSகைகளில்) அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப் பட்டு ஏறத்தாள 55 தினங்களாக, நோயின் பிடியில் சிக்கி,தற்போது " பூரண நலம் பெற்றுவிட்டதாக " அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாக அலுவலர் மருத்துவர் திரு C.பிரதாப் ரெட்டி அவர்களால் தற்போது 
அறிவிக்கப்பட்டுள்ள செல்வி.J ஜெயலலிதா அவர்களின் " பெயரால் " வெளியிடப்பட்டுள்ளது அறிக்கை ஒன்று.

அதில் என்ன விசேஷம் என்று கேட்டால், தாம் மக்களின் ஏகோபித்த பிரார்த்தனைகளாலும், அவர்களதுஅன்புமிகுந்த வேண்டுகோள்களாலும், இறைவன் மீது அவர்கள் வைத்துள்ள 
நம்பிக்கையின் அடிப்படையினாலும் தாம் "பரிபூரண நலம் "பெற்றுவிட்டதாகவும், விரைவில் தமது வழக்கமான அரசுப் 
பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் மிகுந்த வாஞ்சையோடு,பொதுமக்களை அவர்களின் மனதை உலுக்கு உலுக்கு என்று உலுக்கி எப்பாடுபட்டாவது அவர்களது இரக்கத்திற்கு தாம் ஆளாக வேண்டும் அதன் மூலம் எதிர்வரும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், ஆளும் அண்ணா திமுகழகம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்றதொரு காலத்தின் கட்டாய 
விளிம்பினில் நின்றுகொண்டு செல்வி ஜெயலலிதா அவர்கள் "பெயரால்"விடுத்துள்ள அறிக்கை கண்டு மயங்காத மனம் யாரும் 
உண்டோ ? என்று சொல்லும் அளவிற்கு அந்த அறிக்கை அமைந்திருந்தது என்று சொன்னால் அது மிகையானதொரு சொல் அல்ல நேயர்களே. ஆனால், இது உண்மையாக இருக்குமானால், அதைப்பார்த்து மகிழ்ச்சி அடையும் முதல் நபராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு 
தொண்டனும் இருப்பான். ஆனால், அதற்கு மாறாக, எதிர் வரும் இடைத்தேர்தலுக்காக, நோயுற்றிருக்கும் அவரது செல்வாக்கை பயன்படுத்தி,திருட்டுத்தனமாக,மோசடித்தனமாகமக்களின்அனுதாபஅலையைபெற்று வென்றாக வேண்டும் என்று திரைமறைவினில், யாராவது சதித்திட்டம் தீட்டி அதனை ஜெயலலிதா அவர்களின் அறிக்கைஎன்றுவெளியிடுவார்களே 
என்றால், அதனைகண்டு குமுறும் எரிமலையாக, கொந்தளிக்கும் கடலாக, சீரும் புயலாக, எதிர்கொண்டு கிளம்புவனும் அந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின்அடிமட்டத்தொண்டனாகவே இருப்பான்.இது உறுதி.உண்மை. ஏனென்றால், பேரறிஞர் அண்ணா,
பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஆகிய இந்த மும்மூர்த்திகளால் செவ்வனே செதுக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒரு உண்மையான 
அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக்   கழகம் மட்டுமே என்பது ஆன்றோர்களாலும் அறிவிற்சிறந்த சான்றோர்களாலும், ஒப்புக்கொள்ளப்பட்ட,ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 
கருத்து என்பதை இந்த உலகம் அறியும் அன்பர்களே.

ஆக, ஒரு மோசடி, ஏமாற்று வித்தை அங்கே அரங்கேற்றம் ஆகியிருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள் எப்படி என்றால், முதல்வர்தான் உடல்நலம் குன்றி இருக்கிறாரே,அதனால் அவருக்குள்ள செல்வாக்கை எப்படியாகினும் 
பயன்படுத்திஇடைத்தேர்தல்களில்வெற்றிபெற்றே தீரவேண்டியதொரு காலத்தின் கட்டாயச் சூழலுக்கு ஆளும் அண்ணா திமுக வந்துவிட்டது. 

சரி. ஒரு பெயருக்கு அந்த அறிக்கை அவரே வெளியிட்டுள்ளதாகவே அரசியல் ஆர்வலர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்று வைத்துக் 
கொள்வோம். ஏன், ஒரு புகைபடத்துடனோ, அல்லது ஒரு வீடியோ பதிவுடனோ அந்த அறிக்கை அரங்கேற்றம் ஆகவில்லை ? என்ற பகுத்தறிவாளர்கள் கேட்கின்ற கேள்விக்கு, ஆளும் கட்சியும் அதன் முக்கிய இலாக்காக்களை கவனித்துவரும் மாண்புமிகு (?) நிதியமைச்சர் OPSஅவர்கள் பதில் சொல்லியே தீரவேண்டியகட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் இது காலத்தின் கட்டாயம்.அந்த அறிக்கையில், எங்காவது ஒரு மூலையிலாவது 
இவருக்கு வாக்களித்து ( இருநூறுக்கும் முன்னூறுக்கும், ஒரு பொட்டலம் பிரியாணி மற்றும் குவாட்டர் பாட்டில் இவைகளுக்கு தனது விலைமதிப்பில்லாத வாக்கு வங்கியை 
இழிச்சவாய்த்தனமாக, விற்று விட்டு ) சோரம்போன அந்த அப்பாவி மக்கள், இன்றைக்கு கொளுத்தம் வெயிலில் கால்கடுக்க வரிசையில் நின்றுகொண்டு, தாங்கள் அரும்பாடுபட்டு, கஷ்டப்பட்டு, நெற்றி வியர்வை நிலத்தில் 
சிந்தி ஈட்டிய பணத்தை புது நோட்டுகளாக மாற்றிட எவ்வளவு சிக்கல், சிரமங்களுக்கு நடுவில் அலைந்து கொண்டு இருப்பதைப் பற்றி ஒரு வார்த்தையைக்கூட அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தமது அறிக்கையில் 
வெளியிடவில்லை ? என்று பகுத்தறிவு சிந்தனையாளர்கள் கேட்கின்ற அர்த்தம் மிகுந்த கேள்விக்கணைகளை நம்மால் புறந்தள்ளி ஒதுக்கிவிடவும் முடியவில்லை.  ஆனால், 
நிச்சயம் நமது முதல்வர்மாண்புமிகுஜெயலலிதா அவர்கள்,இரக்க சிந்தனை மிகுந்தவர்கள், ஏழை எளிய மக்கள் மீது " அதீத அன்பும் அக்கறையும் கொண்டவர்கள்",அவர்கள் முன்னேற்றத்திற்காக மட்டுமே இந்த வயதில் தான் சிந்தித்து,சிந்தித்து, வாழ்ந்து வருவதாக சொன்னவர்கள் 
அந்த" மக்களால் நான் !! மக்களுக்காக நான் !! " என்று கடந்த சட்டமன்றத்தேர்தலில் நடந்த ஒவ்வொரு  பரப்புரைகளின்போது அவர் 
ஆவேசத்தோடும், உண்மையான அன்போடும் உறுதிபட பேசியது இன்னமும் என்போன்ற நடுநிலையாலர்களதுநினைவினில் நீங்காத இடம்பெற்றுள்ளது. எனவே இந்த அறிக்கையில், மக்கள் படும் துன்பத்தை,துயரத்தைப்பற்றி 
எதுவுமே குறிப்பிடாமல், இடைத்தேர்தல் வெற்றி ஒன்றை மட்டுமே குறியாக வைத்து, "அந்தத்தாய்உள்ளம்- தூய்மை மட்டுமே நிறைந்துள்ள அன்பு உள்ளம் " அவர் சுயநினைவோடு இந்த அறிக்கை வெளிவரவே வராது !! இது இந்தக்கழகத்தை உருவாக்கிய எங்கள் தலைவர் மறைந்த எம்ஜி.ஆர். மீது 
ஆணை என்று கட்சியின் அடிமட்டத்தொண்டன் கண்ணீருடன் கூறுவதை நாம் எற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும் 
அன்பர்களே. என்ன..நான்..சொல்வது. 

மொத்தத்தில், இந்த அறிக்கை ஒரு பக்கா பித்தலாட்டம் நிறைந்த ஒன்று இது மாண்புமிகு அம்மா என்று அன்புமிகுந்து அழைக்கும் அவரது கட்சியின் அடிமட்டத்தொண்டர்களை ஏமாற்றி, அவர்களது பொன்னான உழைப்பையும், அவர்களது வாக்குகளையும் 
பெற்று வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவருடன் இருக்கின்ற சதிகாரக்கும்பலின் கைவேலைதான் 
என்று அக்கட்சியின் அடிமட்டத்தொண்டன் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது ? இல்ல கேட்கிறேன். இது நூத்துக்கு நூறு அவர்பெயரால் அவரது பெயரை மோசடியாக பயன்படுத்தி 
வெற்றி பெற சதித்திட்டம் தீட்டிய கும்பலின் அறிக்கைதான் என்று அந்தக்கட்சியின் உண்மைத்தொண்டன் நினைப்பதை 
அந்த தொண்டனின் சார்பாக இங்கே அவனது கருத்தாக வெளியிடப்படுகிறது அன்பர்களே. மற்றப்படி இதைப்பற்றி நமக்கு என்ன கவலை. இந்த அறிக்கையைப்பார்க்கும்போதும் சரி,
படிக்கும்போதும் சரி, மறைந்த எனது அன்புத்தந்தை அடிக்கடி குறிப்பிடும் பழைய பழமொழிதான் எனது நினைவின் பால் வருகிறது. அதுதான் இங்கே இந்த நமது 
கட்டுரைக்கும் தலைப்பாகத் தரப்பட்டு உள்ளது என்று கூறி உங்கள் அனைவரிடம் இருந்து இந்த அளவில் அன்பு வணக்கம்கூறி விடை பெறுகிறேன்.

கிடக்குறது கிடக்கட்டும் !!
கிழவிய தூக்கி மணமேடையிலே உட்கார வை !!


நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு.

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கதவை சாத்தடி !!-- ( பணத்தின் அருமையை இக்கால இளைஞர்கள் புரிந்துகொள்ள எழுதப்பட்ட கட்டுரை இது !!)




                 கதவை சாத்தடி !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் என் இனிமை
நிறைந்த காலை வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

இன்றையதினம், நான் எழுதப்போகும்
இந்தக் கட்டுரை, பணத்தைப் பற்றியது.
அதன் சிறப்பைப் பற்றியும், அது நமது
கைகளில் இருக்கும் வரை இந்தஉலகம்,
நமது சமூகம், நமது சொந்த பந்தங்கள்,
நம்மிடம் எப்படி இருப்பார்கள், அதனை
நாம் இழக்கின்றபோது, இதே சமூகம்
நம்மை எந்தக் கண்கொண்டு பார்க்கும்
என்பதை சற்று விரிவாக, விளக்கமாக
இக்கால இளைஞர்கள்,யுவதிகள் நன்கு
புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதை
உணர்ந்து எதிர்காலத்தில் எப்படி நடந்து
கொண்டால், அது அவர்களுக்கு பயன்    
அளிக்கும் என்ற கருத்தை மையமாகக்
கொண்டது.

                                   ப  ண ம் !!

இந்த மூன்றெழுத்து மந்திரத்தில் மட்டுமேஇவ்வுலகம் சுற்றிச் சுழன்றுகொண்டுள்ளது.
நம்கையில் பணம் இருக்கும்வரை நம்மை
மதிக்கும் இதே சமூகம், நம்முடைய உற்றார்
உறவினர்கள், சொந்தங்கள், நண்பர்கள் எனஅனைவருமே, அது நம்மிடம் இருந்து அகன்றுவிட்டது என்று தெரிந்தவுடன், தங்களதுஅணுகுமுறையைமாற்றிக்கொள்வதுஎன்பதுதான்வேதனையிலும் மிகுந்த வேதனை தரும்விஷயமாகும். 

இதைப்பற்றி சங்ககால இலக்கியபாடல் ஒன்றினில், என்ன சொல்லப்பட்டுள்ளதுஎன்று கேட்டால் :-


இல்லானை இல்லாளும் வேண்டாள் !!
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் !!
செல்லாது அவன் வாய்ச்சொல் !!

அதாவது, பணம் இல்லாதவனை, கட்டிய மனைவிமதிக்க மாட்டாள். பெற்றெடுத்த தாயும் தகுந்தபாசம்,அன்பு செலுத்திட மாட்டாள். அவன்
சொல்லும் எந்த சொல்லும்,பேச்சும்,செயலும்
இந்த சமூகத்தில், மதிக்கப்படாது கருத்தில்
கொள்ளப்படாது என்பதே பாடலின் பொருள்.

இதையே வான்புகழ் திருவள்ளுவர் என்ன
சொல்லிச்சென்றுள்ளார் என்று கேட்டால்,

இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு... ... ... (குறள்.752)

கையில் செல்வம்/பொருள் இல்லாதவரை
எல்லோரும் இகழ்வார்கள்.பொருள் உடைய
செல்வந்தரை அனைவரும் போற்றி மதித்து
நடப்பார்கள் என்பதே இக்குறளின் பொருள்.

இதே கருத்தை ஒரு விலைமாதின் தாயார்
எப்படி பாடுகிறார் என்றால் :-

கையில் காசில்லாதவன் !!
கடவுளே ஆனாலும் !!
கதவை சாத்தடி !!

கடவுளே ஆனாலும் காசு இல்லை என்றால்
இந்த சமூகம் மதிப்பது என்பது எள்ளின்
முனையளவுகூட இல்லவே இல்லை என்ற
கருத்தை இக்கால இளைய சமுதாயம் தம்
மனதில் பதிய வைத்துக்கொண்டு அதன்படி
ஈட்டுகின்ற பொருளை பாதுகாத்து தேவையான
அளவிற்கு மட்டுமே செலவழித்து வாழ்ந்திட
வேண்டும் எதிர்கால சமுதாயம் உங்களை
மதிக்க வேண்டும், மரியாதை தந்திட வேண்டும்
என்று நீங்கள் கருதுவீர்களேயானால், பணம்
உங்கள் கைகளில் இருந்தால் மட்டுமே அது
சாத்தியம். அதை இழந்து விட்டால் இந்த
சமூகம், நம்மை தலையிலிருந்து வீழ்ந்த
முடிக்குச் சமமாகத்தான் மதிக்கும் என்று 
வான்புகழ் சொல்லிச்சென்ற திருக்குறளோடு 
கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 
நிலையின் இழிந்தக் கடை... ... (குறள்.964)

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை T.R. பாலு.

திங்கள், 4 ஏப்ரல், 2016

எல்லாமே காலணா, அரையணா, ஓரணா கட்சிகள்தான் இங்கே !!





இங்கே எல்லாமே காலணா,

அரையணா, ஓரணா கட்சிகளே !!




எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கம்.

தமிழக அரசியல் களம் கொஞ்சம் கொஞ்சமாக 
சூடு பிடிக்க துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான, திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே மட்டுமே உண்மையான போட்டி. மத்ததெல்லாம் வெறும் ஜூஜூபி கட்சிகளே என்பது அரசியல் ஆர்வலர்கள் மனதில் உள்ள கணக்கு. அந்த வகையில் இந்த இரண்டு கட்சிகளிலும் இணைந்துள்ள ஏனைய 
கட்சிகளை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால்
திமுக வுடன் இதுவரை கீழ்க்கண்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்து உள்ளன.

1) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி.
2) இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி.
3) மனித நேய மக்கள் கட்சி 
4) பெருந்தலைவர் மக்கள் கட்சி.
5) பொன்.குமார். விவசாய தொழிலாளர் கட்சி.
6)  முன்னாள் IAS அலுவலர் திருமதி சிவகாமி கட்சி.
7)  பேராயர் எஸ்ரா.சற்குணம் ஆதரவு அமைப்புக்கள்.

இன்னும் இந்த அணிக்கு வரவேண்டிய கட்சிகள் 
திரு.கிருஷ்ணசாமி  புரட்சி தமிழகம், மற்றும் 
SDPI ஆகிய கட்சிகள். மேலே குறிப்பிட்டுள்ள 
அனைத்து கட்சிகளுமே மக்களுக்குத் தெரிந்த 
ஓரளவு வாக்கு வங்கியை தன்னகத்தே பெற்று 
உள்ள கட்சிகள் ஆகும்.

ஆனால் இதற்கு மாறாக, ஆளும் அஇஅதிமுக
கட்சியுடன்(  தொகுதி உடன்பாடு இனிமேல்தான் )
கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளைப் பார்த்தால் 
எதுவுமே ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 
நூறு வாக்குகள் கூட பெற்றிடத் தகுதியற்ற 
காலணா,அரையணா,ஓரணா கட்சிகளாகவே 
தென்படுகிறது. இவங்கள வச்சுகிட்டு அந்த 
பொம்பள தேர்தலை சந்திக்க இருப்பதை நாம 
நினைச்சால், சிரிப்புத்தான் வருகுதையா. இந்த அணியில்உள்ளமிகப்பெரியகூட்டணி என்னன்னு கேட்டா அது 

              "பணம்" மட்டுமே.

இந்த இரண்டில் எந்த அணி வெல்லப்போகிறது 
என்பது தெரியப்போகும் நாள் மே 19 அன்று 
பகல் 12 மணிக்கு மேல்.

தர்மம் மட்டுமே வெல்லும் என்ற நம்பிக்கையில் கட்டுரையை நிறைவு செய்கிறேன் அன்பு உள்ளங்களே.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR. பாலு. 

வியாழன், 24 மார்ச், 2016

இனம் இனத்தோடுதான் சேரும் !! ( திருடன் சரத் + திருடி J சந்திப்பு )






மானங்கெட்ட செருக்கி ஒருத்தியின் கதை இது !!



இனம் இனத்தோடுதான் சேரும் !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.
நேற்றையதினம் தோட்டத்தில் ஜே 
வலியச்சென்று திருடன் சரத்தை 
வரவைத்து, இருவரும் ஒருவருக்கொருவர் 
குசலம் விசாரித்து பிறகு அந்தக்கூட்டணியில் 
இவர் இணைந்து விட்டாராம். ஏன் இந்த 
திடீர் மாற்றம் ? எல்லாம் திருடன கேஸ்தான்.
நடிகர் சங்க பணத்தை கையாடல் செய்த 
வழக்கு அதிலிருந்து தப்பிக்க, ஒருவேளை 
இந்த J பதவிக்கு வந்தால் ( அதாவது அத்தைக்கு 
மீசை முளைத்தால்-இது சரத் தரப்பு நினைப்பு )
J தரப்பு நினைப்பு= வலுவாக ஒரு கட்சியோ 
அமைப்போ இதுவரை இங்க வரலை. ஒருவேளை 
தேர்தலில் தாம் அநாதை ஆகிவிடுவோமோ 
என்ற அச்சத்தின் காரணமாக இவன் சரத் 
ஓரளவு பேர் எடுத்தவன்-சொன்னபடி கேட்பவன் 
( எல்லாம் சில்லரைக்குத்தான்- வேற எதுக்கு ?)
எனவே வேற கதி இல்லை தமக்கு என்பதால் 
சரத்தை வரவைத்து வலுவிலே முந்தானை 
விரித்திருக்கலாம்.
ஒரு பழைய பழமொழிதான் எனது நினைவுக்கு 
வருகிறது.
மானங்கெட்ட செருக்கி !!
மஞ்ச தேச்சு குளிச்சாளாம் !!-அதை 
ஈனங்கெட்ட பய ஒருத்தன் 
எட்டிப்பார்த்தானாம் !!

( இது எப்டி இருக்கு ?)

நன்றி. வணக்கம்.

அன்புடன். திருமலை.இரா.பாலு.

வியாழன், 10 மார்ச், 2016

அதனாலே முழிக்குது " அம்மா " பொண்ணு !! ( திரு.விஜயகாந்த் விஷயத்தில் ஜெ & தமிழிசை )






எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழில் 
வெளிவந்த திரைப்படம்தான் 

" தை பிறந்தால் வழி பிறக்கும் "

எனும் கருப்பு வெள்ளை திரைப்படம். இலட்சிய 
நடிகர் SSR, பிரேம்நசீர்,இராஜசுலோச்சனா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்த சிறந்த படம் அது.
மனத்தை கொள்ளை கொள்ளும் பல பாடல்கள் 
அப்படத்தில் இடம்பெற்றது.
அதில் ஒரு பாடல்தான் இந்தப்பாடல்.

https://www.youtube.com/watch?v=oRR2iaB6miI

மேலே குறிப்பிட்டுள்ள வலையில் அந்தப்பாடலை நீங்கள் பார்த்து கேட்டு இரசிக்கலாம்.

நினைச்சது ஒன்னு !!
நடந்தது ஒன்னு !! அதனாலே 
முழிக்குது அம்மா பொண்ணு !!
கணக்கும் தவறாகிப் போனதனாலே !!
கவலை கொள்ளுதே தனியா நின்னு !!

என்று அந்தப் பாடல் துவங்கும். நான் எதற்காக 
இதை, இப்போது குறிப்பிடுகிறேன் என்றால், 
இந்தப்பாடல் தற்போது அம்மையார் ஜெ மற்றும் 
பிஜேபி மாநில தலைவர் தமிழிசை ஆகிய 
இருவருக்கும் நன்றாக பொருந்துகிறது என்பதால் இதைக் குறிப்பிடுகிறேன் அன்பர்களே.

எப்பாடு பட்டாவது தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களை திமுக வோடு சென்று கூட்டணி அமைத்து விடக்கூடாது என்பதிலே இருவரும்எடுத்துக்கொண்ட பகீரதப்பிரயத்தனத்தையும் மீறி அவ்விரு கட்சிகளுக்கும் 
கூட்டணி ஏற்பட்டுவிட்டது. இன்றோ அல்லது நாளையோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளது. 

இதை சற்றும்எதிர்ப்பார்த்திடாத இந்த இரண்டு பேரையும் ( ஜெ & பிஜேபி)இணைத்துப்பார்த்தால், இந்தப்பாடல் இவர்களுக்கு மிகவும் கனக்கச்சிதமாக பொருந்துகிறது என்பதே எனது 
கருத்து.

அவர்கள் இருவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில் காவியக்கவிஞர் வாலி ஒரு பாடல் எழுதி இருப்பார்.

ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் !!
ஆதவன் மறைவதில்லை !!
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் !!
அலைகடல் ஓய்வதில்லை !!
                          அதுபோல 
எவர் தடுத்தாலும் 
திமுக தேமுதிக கூட்டணி அமைவதை 
எந்த ஆதிக்க சக்தியாலும் (அஇஅதிமுக) துரோக கும்பலாலும் (மக்கள் நலன் கெடுக்கும் கூட்டணி)
நாரத சக்திகளாலும் ( பிஜேபி)தடுத்து நிறுத்திட இயலாது. இது காலத்தின் கட்டாயம்.
இதுதான் இது ஒன்றுதான் தற்போதைய தமிழக 
அரசியல் நிலைமை.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

தாயாலே வந்தது !! தீயாலே வெந்தது !! (இது தமிழ்நாட்டு அரசியலுக்கும் பொருந்தும்)






அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.

அது 1982ம் ஆண்டு. மறைந்த தமிழ்த்திரைப்பட 
நடிகர் K.பாலாஜியின் சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவன 
தயாரிப்பில், திரு.கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில், திரு கங்கை அமரன் அவர்களின் இன்னிசையில் மறைந்த காவியக்கவிஞர் வாலி எழுதிய பாடல் திரு K.J. ஜேசுதாஸ் அவர்களின் இனிய குரலில் இடம்பெற்ற வெற்றிச் சித்திரம்தான் " வாழ்வே மாயம்"என்ற வண்ணக் காவியம். அதில் கதாநாயகன் தனது 
இறுதி நாட்களில் அதாவது இறக்கும் தருவாயில் 
ஒரு பாடல் ஒன்று பாடுவார். அதுதான் :-

வாழ்வே மாயம் !! இந்த வாழ்வே மாயம் !!
தரைமீது காணும் யாவும் !!
தண்ணீரில்போடும் கோலம் !! நிலைக்காதம்மா !!
யாரோடு யார் வந்தது !! நாம் போகும்போது 
யாரோடு யார் செல்வது !! 

இந்தப்பாடலில் ஒரு வரி ஒன்று வரும். அதுதான் இந்தக்கட்டுரையில்தலைப்பாகக்குறிப்பிடப்பட்டுஇருக்கிறது.

ஆடும் வரை ஆட்டம் வரும் !!
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும் !!
தாயாலே வந்தது !! தீயாலே வெந்தது !!                     மெய்யென்று மேனியை யார் சொன்னது !!

இது தற்போதைய தமிழ்நாட்டு அரசியலுக்கும் நன்கு பொருந்துகிறது. 

எப்படி என்றால், 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் நடிகை 
ஜெயலலிதா திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் விலைமதிப்பில்லாத வாக்குகளால் பதவிக்குவந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, இங்கே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து ஆட்டம் போட்டாரோ, அதே நடிகை ஜெயலலிதா 
இதே கேப்டன் அவர்களது வாக்குகளை இழந்து நாளை நடுத்தெருவுக்கு வரப்போகிறார் என்பதை எடுத்துக்காட்டிய நிகழ்வுதான், நேயர்களே, நேற்றையதினம் காஞ்சிபுரம் வேடலில், கேப்டன் கூட்டிய அரசியல் திருப்புமுனை மாநாட்டிற்கு வந்த கூட்டம், போயஸ்கார்டனின்அடிவயிற்றில் 
டும்கூர் புளியைக் கரைத்து விட்டிருக்கிறது.

நாம் எந்த ஒன்றால் புகழ் அடைகின்றோமோ அதனாலேயே நமது அழிவும் நமக்கு காத்துக்கொண்டிருக்கிறது என்று 
ஆன்றோர் பெருமக்கள் கூறிய வாசகம் எனது நினைவுக்கு இன்று வருகிறது.

எப்படி விஜயகாந்த் அவர்களின் வாக்குகளால் வெற்றி பெற்று அரசியல் வாழ்வில் மீண்டும் முதல்வர் பதவி பெற்று சுகம் கண்டஜெயலலிதா, நாளைஅதே கேப்டனால் எதிர்வரும் சட்டமன்றத் 
தேர்தலில்மண்ணைக்கவ்வப்போவதுஎன்பது உறுதி.உறுதி.உறுதி.

இதைஎனதுமனக்கண்களில்நான்அசைபோட்டுக்கொண்டிருந்த போது எனது நினைவுக்கு வந்த பாடல்தான், அந்தப்பாடலில் 
வந்த வரிகள்தான் :-

தாயாலே வந்தது !!

தீயாலே வெந்தது !!

என்பது. 

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு 

வியாழன், 28 ஜனவரி, 2016

ஆசை இருக்கு தாசில் பண்ண !! அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க !! ( மக்கள் நலக்கூட்டணிக்கு)






மக்கள் நலக்கூட்டணிக்கு என்ன நடக்கும்/என்ன கிடைக்கும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ?



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

வணக்கம் உங்கள் அனைவருக்கும்.  தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்:-

ஆசை இருக்கு தாசில் பண்ண !!

அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க !!

என்று. அதையேதான் நான் இந்தக் கட்டுரைக்கு 
தலைப்பாகத் தந்துள்ளேன். முதலில் இந்த 
மக்கள் நலக்கூட்டணி என்பது எங்கே,எதனால்,
எந்த அரசியல் பின்னணியில் துவக்கிவைக்கப் 
பட்டது என்பதை பார்ப்போம்.

கடந்த ஆண்டு துவக்கத்தில் மதிமுக கட்சியின் 
நிறுவனர்/பொதுச்செயலாளர் வைகோ (என்ற 
கடந்த காலத்தில் உண்ட வீட்டுக்கு துரோகம் 
செய்த ஒரு மன்னிக்க முடியாத துரோகியால்) 
சாத்தூர் விருந்தினர் மாளிகையில் முன்னாள் 
காவல்துறை உளவுப்பிரிவில் உயர்பொறுப்பில் 
இருந்த அலுவலர் ஒருவரால், தமிழக அரசின் 
உயர்பொறுப்பில் இருந்தவரின் உத்திரவுக்கு 
இணங்க, (அப்போது மதிமுக திமுகவை நோக்கி 
நெருங்கிப்பயணித்த காலம்-இந்த போக்கைத் 
தடுத்து நிறுத்திட வேண்டும்) ஆளும் கட்சிக்கு 
எதிரான வாக்குகளை சிதறடித்திட வேண்டும் 
என்ற சதிகாரியின் ஆசைக்கு பலியாகி இந்த 
சாத்தூர் உத்தம புத்திரன் ஒரு மிக மிகப்பெரும் 
தொகையை அங்கே கையூட்டாகப் பெற்றுக் கொண்டு ( இப்படி அவளிடம் பணம் பெறுவது என்பது ஒன்றும் இந்தப்பாவிப்பயலுக்கு புதிதல்ல. பரம்பரைப் பழக்கம்தான்) அதை, அந்தத் திட்டத்தை செயல்படுத்தவே 
முதலில் மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் துவக்கி அதில், மனித நேய மக்கள் கட்சியின் ஜவகருல்லா,இரண்டு கமிஷன் கட்சிகள் மன்னிக்கவும், கம்யூனிஸ்ட்
கட்சிகளையும் ஒன்றிணைத்து அத்துடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியையும் சேர்த்து இவர் உட்பட ஒரு நவீன பஞ்ச பாண்டவர்களாகத் தான் இந்த இயக்கம் தோன்றியது.

அது சிறிது காலம் கழித்து அதிலிருந்து மநேமக வின் நண்பர் ஜவகருல்லா மேடம் அவர்களிடம் விலை பேசப்பட்டு அவரது கட்சியையே அடமானம் வைத்திட முயன்றபோது 
அவர் அங்கே தாம்பரத்தில் போட்டி கட்சிக் கூட்டம் நடத்த முற்பட்டு அதன்பிறகு வெளியேற்றப்பட்டார். ஆக இப்போது 
பஞ்சபாண்டவர் என்பது கட்டில் கால் என்று ஆகிவிட்டது.இவர்கள் எஞ்சியிருக்கும் நான்கு கட்சியின் பெயரால் ஒரு பொது அறிக்கை ஒன்று தயாரித்து, இப்போது கைநீட்டி காசு வாங்கியதன் விசுவாசத்தை, துரோகி வைகோ மிகவும் 
நன்றாகவே செயல்படுத்திக்கொண்டு வருகிறார். சென்ற மாதம் ஆளும் கட்சியில் இருந்து திரு நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டதற்கு காரணமே, அவர் வைகோவைப்பற்றி மிக மிகக் கேவலமாக ஆனால் உண்மையில் நடந்தவற்றை தந்தி 
தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததனால்தான். நேற்று முன்தினம் மதுரையே "அதிரும் அளவுக்கு" ஒரு பொதுக்கூட்டத்தை துரோகி வைகோ கூட்டினாராம்.( எல்லாமே காசு கொடுத்து கூட்டி வந்ததுதான் அது வேற விஷயம்) மிக சிறப்புடன் நடந்தேறியதாம். 

ஆக இவர்களோட ஆசை, எண்ணம், எதிர்பார்ப்பு என்பது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாதுஎன்பது துரோகி வைகோவிற்கு மிக நன்றாகத் தெரியும்.
இருந்தாலும் அவர் ஒரு ஆம்பள விபச்சாரியாக இங்கே வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்து. 

ஆக முடிவாக என்ன இந்தக்கட்டுரை விளக்குகிறது என்று சொன்னால், இந்த 
ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டப்போவது என்பது கிடையவே கிடையாது.வாங்கிய கைக்கூலிக்கு துரோகி  வைகோ மிக நன்றாக செயல்படுவதன் நோக்கமே அதிமுக எதிர்ப்பு வாக்குகளைச் சிதற வைத்திட வேண்டும் 
என்ற ஒன்றே ஒன்றுதான். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லவே இல்லை. தமிழ்ச்சமுதாயம் இந்தக்கிறுக்கர்களைநம்பத்தயார் இல்லை. அதுதான் உண்மை. வரப்போகும் தேர்தலில் திமுக கடந்த 1971ல் வெற்றி பெற்றது போல 
அமோக வெற்றியை திமுக ஈட்டும் என்பதில் தமிழர்களுக்கு எள்ளின் முனை அளவுகூட ஐயம் இல்லவே இல்லை என்று சொல்லி என் கருத்தை கட்டுரையின்வாயிலாகவரைந்துநன்றிகூறி விடைபெறுகின்றேன்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா. பாலு.